top of page
Deity statue surrounded by garlands, Melven Pakkam Perumal, sits on the altar

ஸ்தல புராணம்

ஏதிலன், கண்துஞ்சும் வெண்ணரவம்

ஏறிக் கழுத்தாடு வனமாலைக்

காதலன், கார்வண்ணன், தொடைமீது

கஞ்சக் கரம்வைத்து முகமாரும்

பூதலம் புகழ்பெம்மார் பொறுத்திருந்து

பொங்கும் கருணைமுகம் பார்க்கும்பொன்

ஆதரம் மீப்பெருக்கி இணைசேர்க்கும்

மேல்வெண்பாக்கத்து மெல்லியனே.

கால நம்முடைய பரந்த, பழம்பெரும் பாரத பூமியை கிழக்கும். மேற்குமாகவும் வடக்கும் தெற்குமாகவும் ஆயிரமாயிரம் திருக்கோயில்கள் அலங்கரிக்கின்றன. அவற்றுள் ஓட்டத்தில் கவனிப்பாரின்றி, அன்னியர்களின் ஆக்கிரமிப்பினாலும் நம்மவர்களின் அலட்சியத்தினாலும் முற்றுமாகக் கைவிடப்பட்ட திருச்சந்நிதிகளில், மிகவும் பவித்ரமானதும், பழமையானதும் மேல்வெண்பாக்கம் திருச்சந்நிதியாகும்.

"ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு கருத்தாக்கம் உண்டு. பாரத தேசத்திற்கு ஸனாதன தர்மம் என்னும் மதமே அந்தக் கருத்தாக்கம்" என்கிறார் ஸ்வாமி விவேகானந்தர். "Every country has a theme of it's own and for India, it is religion" - Swaami Vivekhanandha.

ஸ்வாமி விவேகானந்தர் கூறிய பொருளின் அடிப்படையில் பார்த்தால், மிகப்பெரிய அருளும், கீர்த்தியும் கூடிய பல்லாயிரக் கணக்கான திருக்கோயில்களைச் சிதிலமடையாமல் காப்பாற்ற நாம் தவறிவிட்டோம் என்பதே உண்மை.

மேல்வெண்பாக்கம் திருச்சந்நிதி நான்கு யுகங்கள் பழமை யானது. சாளக்ராமத் திருமேனியாக, ஸ்வயம்புவாக, தாயாரும் பெருமாளும் சதுர் யுகங்களாய், ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரமான மேல்வெண்பாக்கத்தில் ஆட்சி செய்யும் மஹிமையை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

Statue of Perumal Melven Pakkam, dressed in colorful garlands and orange garment.

காலம் வரையறுக்கவொண்ணா இச்திருச்சந்நிதியில் முதல் யுகமான ஸத்ய யுகத்தில் 11 அடி உயரமாகவும், இரண்டாம் யுகமான த்ரேதா யுகத்தில் 9 அடியாகவும், மூன்றாம் யுகமான த்வாபர யுகத்தில் 6 அடியாகவும், நான்காவது யுகமான இந்தக் கலியுகத்தில் இரண்டரை அடி உயரமாகவும் திருச்சேவை ஸாதிக்கும் இந்தத் தாயார் பெருமாளின் திருமேனியழகைக் காணக் கண்கோடி வேண்டும். இத்திருச்சந்நிதி பாஞ்சராத்ர ஆகம முறைப்படி நடைபெறுகிறது.

மலர்ந்த புன்னகையுடன், அகன்ற திருமார்பினனாய், தன் திருமகளாம் ஸ்ரீமஹாலக்ஷ்மியெனும், ஸ்ரீமங்கல லட்சுமிப் பிராட்டியை தமது இடது மடியிலே அமர்த்தி அவளை அணைத்த வண்ணம் திருச்சேவை ஸாதிக்கும் பேரழகு எத்தனை பிறவிகள் எடுத்தாலும் காண இயலாத அற்புத வரம்.

Melven Pakkam Perumal statue adorned with flowers and a red dress

இப்படிப்பட்ட பவித்ரமான, கண்ணிற்கும் மனதிற்கும் குளிர்ச்சியான இத்திருச்சேவையை விட்டு அகல மனமே யில்லாமல்தான் ஸப்தரிஷிகளும், மூலவர் கருவறையிலேயே, நான்கு யுகங்களாய் பெருமாளுக்கு இடதும் வலதுமாய் நின்று கூப்பிய கரங்களாய்த் தொழுத வண்ணமாய் உள்ளனரோ என்றே கருதத் தோன்றுகிறது!

அத்ரி மஹரிஷி, தாயார் பெருமாளுக்கு நேர் பின்பும், ப்ருகு, குத்ஸ, வஸிஷ்ட மஹரிஷிகள் பெருமாளுக்கு வலது புறமாகவும், கௌதம, காஸ்யப, ஆங்கிரஸ மஹரிஷிகள் பெருமாளுக்கு இடதுபுறமாகவும் காலம்காலமாய் நின்று ஸேவிப்பதைப் பார்க்கும் போது இந்தத் தாயாரின் பெருமை யையும், பழமையையும், மஹத்துவத்தையும் சொல்ல நமக்கு வார்த்தைகளோ, பக்தியோ, தபஸோ போதவே போதாது என்பது நிதர்சனம்.

மஹாத்மாக்களும், ரிஷிகளும் மேல்வெண்பாக்கம் தாயார் பெருமாளுக்கு அனவரதம், அதாவது நாள் முழுவதும், ஆராதனம் செய்து வருவதாக ஐதீகம். மஹாத்மாக்களைப் பார்க்கக் கூடிய தபோ பலம் நமக்கு இல்லையென்றாலும், அந்த மஹாத்மாக்களின் ஸ்பரிசக் காற்று நம் ஊழ்வினைகளை அற்றுப்போகச் செய்துவிடும் என்பது நம்பிக்கையும், அனுபவமும் ஆகும்.

மேல்வெண்பாக்கம் திவ்ய க்ஷேத்திரத்தில் அர்ச்சகர் ஸ்வாமிகள் நித்யம் அதிகாலை ஆராதனம் செய்வதற்கு முன்பாகவே, யாரோ ஒரு மஹாத்மாவோ, ரிஷியோ இந்தத் தாயார் பெருமாளுக்கு ஆராதனம் செய்து விடுவதாக ஐதீகம். தாயார் பெருமாளிடம் பக்தியும், சரணாகதியும் உள்ள அர்ச்சகர் ஸ்வாமிகள் சிலருக்கு, அவர்கள் நடை திறக்கும் சமயத்தில் இதற்கான அறிகுறிகள் புலப்படுவதாக, அவர்களே ஸ்லாகிப்பதுண்டு.

மூலவர் ஸ்ரீலக்ஷ்மீநாராயணர் என்னும் ஸ்ரீஸ்வதந்த்ரலக்ஷ்மீ நாயிகா ஸமேத ஸ்ரீயுகநாராயணப் பெருமாள். தாயார் ஸ்ரீஸ்வதந்த்ர லக்ஷ்மீ.

மிகவும் சூட்சுமமான பலன்களைத் தரவல்ல கூர்ம கஜ ஸர்ப்ப பீடத்தின் மீது மூலவர் தாயாரும் பெருமாளும் திருச் சேவை சாதிக்கிறார்கள்.

Golden statue of a child deity with a cobra, a religious background.

உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீகல்யாண கோவிந்தராஜப் பெருமாள். தாயார் ஸ்ரீமங்கல லஷ்மீப் பிராட்டியார்.

மேல்வெண்பாக்கம் கருவறை சூட்சுமங்கள் நிறைந்தது என்று குமுதம் ஜோதிடம் முன்னாள் ஆசிரியரும், மஹாத்மாவும், ஜோதிஷச் சக்ரவர்த்தியுமான ஸ்ரீமான். A.M.ராஜகோபாலன் ஸ்வாமிகள் அருளிச் செய்திருக்கிறார்கள். மேல்வெண்பாக்கம் கருவறை அதீதமான வெப்பம் கொண்டது. இந்த வெப் பத்தைத் தணிக்க சாட்சாத் கங்கை நதியே, தாயார் பெருமாளின் பீடத்திற்கு நேர் கீழே ப்ரவாகமாகப் பாய்ந்தோடி, தாயார் பெரு மாளை வேண்டிய குளிர்ச்சியுடன் வைத்திருப்பதாக ஐதீகம்.

மேலும் தாயார் பெருமாள் பீடத்திற்கு நேர்கீழே ஒரு மாபெரும் சித்த புருஷர் அஷ்டமா ஸித்திகள் புடைசூழ அமர்ந்து தவம் செய்வதாகவும், அவர்தான் அர்ச்சகர் ஸ்வாமிக்கு முன் அதிகாலையில் தாயார் பெருமாளுக்கு ஆராதனம் செய்வதாகவும் ஐதீகம். மேலும் தாயார் பெரு மாளின் அனுக்ரஹத்தாலும், சித்த புருஷரின் அருளாலும் மேல்வெண்பாக்கம் தாயார் பெருமாளைத் தொடர்ந்து வழிபடு வோருக்கு அஷ்டமா ஸித்திகளும் நாளடைவில் கைகூடும் என்பது திண்ணம்

Ornate structure with garland and cloth; Melven Pakkam Perumal, religious site background.

மேல்வெண்பாக்கத்தில் தாயாரும் பெருமாளும் வடக்கு நோக்கிய திருச்சேவை ஸாதிப்பது என்பது மிக மிக அபூர்வமானது. அதனால் இங்கு நித்ய சொர்க்க வாசல். இது பூலோக வைகுண்டம். ஆகவே, அனவரதம் நமக்கு வைகுண்ட வாசம்தான்.

நித்ய ஸுரியாகிய ஸ்ரீ ஆதிசேஷனே எம்பெருமானின் இடது திருத்தோளிலிருந்து இறங்கி அவரே கௌஸ்துப மாலை யாய் எம்பெருமானின் திருமார்பின் இடது நடுவில் ஐந்து தலை நாகமாய் திருச் சேவை ஸாதித்து, பெருமாளின் முழுத் திருமேனியைச் சுற்றி வளைந்து திருப்பாதத்தில் தனது நீண்ட வால் போன்ற அங்கத்தை அமைத்திருப்ப தாக ஐதீகம். உடையவர் ஜகதாச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரே சாக்ஷாத் ஸ்ரீஆதிசேஷனின் அம்சமானதாலும், அவர் தம் க்ருபா கடாக்ஷமும் இந்த ஸ்ரீசந்நிதியில் மிகவும் பிரசித்தம்.

 அவ்வாறு ஆதிசேஷன் நம் பெருமாளின் திருமார்பின் நடுவிலிருந்து நம்மை நோக்கி நேர்பார்வையாக ஸேவை ஸாதிப்பதால் பக்தர்களை பீடித்திருக்கும் ராகு, கேது, அங்காரக, காலஸர்ப்ப மற்றும் அனைத்துவிதக் கொடிய தோஷங்களையும் பரிபூரணமாக விலக்கி, இதனால் நீண்ட காலமாக தடைபட்டத் திருமணப் பேறு, தாம்பத்ய அந்யோன்யம், ஸத் ஸந்தான ப்ராப்தம், வாக்வித்யா லாபம், வியாபார அபிவிருத்தி, உத்யோக உன்னத்தி, அரோக தீர்காயுள் போன்ற அனைத்துவித இக லோக ப்ராப்திகளையும்,

மோக்ஷ ஸாம்ராஜ்யத்தையும் அருள்கிறார் என்பது பெரியோர் தம் திருவாக்கு.

த்ரேதாயுகத்தில் ஸ்ரீஸீதாராமச்சந்திர மூர்த்தி யின் அனுக்ரஹத்துடன், ஸ்ரீராமபக்த ஹநுமன் மூன்று மண்டல காலம் இத்திவ்ய தம்பதிகளை நோக்கித் தவம் புரிந்த காரணத்தால், இங்கு வந்து வழிபடும் அன்பர்களுக்கு பூரண இறை பக்தி, ஸகலவித மனோவியாதிகள் நிவர்த்தி, புத்திர் பலம், மனம் ஒருமித்த லயிப்பு, மனோ தைர்யம், வாக்பலிதம் ஆகியவை ஸித்திக்கிறதாக அனுபவம்.

மிக முக்யமாக, தாம்பத்ய அன்யோன்யம் இல்லாமல் அவதியுறும் தம்பதிகளுக்கு மிகவும் ஏற்ற பரிகாரம், மேல்வெண்பாக்கம் திவ்ய தம்பதியான தாயார் பெருமாளைச் ஸேவித்து அவர்களைச் சரணடைவதுதான்.

இதன் உட்பொருள் என்னவென்றால், இந்தச் சந்நிதியில் எங்கும் காணக் கிடைக்காத பேரருளாய், தாயாரும் பெருமாளும் ஒரே நேர்க்கோட்டில் ஒட்டியபடி, ஸம பலத்துடன், ஐக்ய பாவத்தில் ஸேவை ஸாதிப்பதுதான். இந்தத் திருச்சேவை வேறு எங்கும் துய்க்கவியலா மிக அரிய அனுக்ரஹமாகும்.

பொதுவாகவே ஸ்ரீதாயார் எல்லாச் சந்நிதிகளிலும் தன் பதியும் ஸ்வாமியுமான பெருமாளை நோக்கிச் சற்றே திரும்பிய வண்ணமாய், ஒரு நூல் இடைவெளி இருக்கும்படி பெருமாள் திருமடியில் எழுந்தருளி சேவை ஸாதிப்பார்.

ஆனால், மேல்வெண்பாக்கத்தில் இதற்கு நேர்மாறாக தன் ஸ்வாமிக்கு நிகர் இணையாக, நெருக்கமாக, ஸம பலத்துடன் திருச்ஸேவை ஸாதித்து அருளுவதாலும், எம்பெருமானுக்குரிய ஸகலவித நிகரான ஸ்வாதர்த்ரிய ஏற்றங்களுடன் அமைந்திருக்கிறதாலும் இத்திருத்தலத் தாயாருக்கு ஸ்ரீஸ்வதந்த்ர லக்ஷ்மீ என்பது திருநாமம். பெருமாளுக்குப் பொதுவாக எத்தனை ஏற்றம் உண்டோ, அத்தனை ஏற்றம் இங்கு தாயாருக்கும் உண்டு.

The Idol of Melven Pakkam Perumal in the temple with floral decorations.

என்னவெனில், ஐக்ய பாவத்தின் தாத்பர்யம் தங்களுக்குள் புரிதல், அந்யோன்யம், ஈர்ப்பு, மனோலயம் ஆகிய குறைபாடுகள் உள்ள தம்பதியர் இத்திருச்சந்நிதி திவ்ய தம்பதிகளிடம் சரணடைந்து, பிரதி வெள்ளிக் கிழமைகள் மற்றும் ப்ரதி மாதம் உத்ராட திருநட்சத்திரம் அன்று நடைபெறும் உத்ஸவங்களில் தொடர்ந்து வழிபட்டு வந்தால், தம்பதிகளுக்கிடையேயான இப்பெரும் குறைகள் முழுவதும் நீங்கப்பெற்று, அவர்களுக்குள் பரஸ்பரம் நல்ல அன்பும், புரிதலும் ஏற்படுமென்பது கண்கண்ட அனுபவம். அதன் பலனாய் அவர்களுக்கு ஒரு நல்ல குழந்தைப் பேறும் அமையப் பெறும் என்பது பலரது வாழ்வில் கண்ட உண்மை. ஆகவே, இவ்வித நல்ல முழுமையான மகிழ்ச்சி நிறைந்த இல்வாழ்க்கையும், மழலைச் செல்வமும் குறைவற அருளுவதற்கென்றே அமைந்துள்ளது இத்திருச்சந்நிதி.

நடமாடும் தெய்வமாக இன்றும் நம்மிடையே அருளாட்சி புரிந்துவரும் காஞ்சி ஸ்ரீமஹாபெரியவாளுக்கு மேல்வெண் பாக்கம் நம் ஸ்ரீதாயார் பெருமாளிடம் அபாரமான பக்தியும் ஈடுபாடும் இருந்து வந்திருப்பதால், முன்பு இத்திருக்கோயில் எல்லைக்குள்ளே இருந்த காஞ்சி ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மேந்த்ர மடத்தில் தங்கி ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹா பெரியவா இந்தத் தாயார் பெருமாளைத் தரிசித்து மகிழ்ந்திருக்கிறார்.

மேலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹா பெரியவா 1957ல் இத்திருச் சந்நிதியில் மூன்று முழு நாட்கள் எழுந்தருளியிருந்து இத் திவ்ய தம்பதிகளை ஏகாந்தமாக அனுபவித்து ஸேவித்துப் பேரானந்தப் பெருமகிழ்வு அடைந்ததாக இவ்வூர் முதியவர்கள் இன்றும் பெருமையுடன் நினைவு கூறுகிறார்கள். அவ்வமயம் ஸ்ரீஉபநிஷத் மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஇஷ்ட ஸித்தீந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் காலத்தில் மிக ப்ரஹ்மாண்ட வேதபாட சாலையும், கோசாலையும் இங்கு செயல்பட்டு வந்திருக்கின்றன.

Black statue of the deity adorned with garland, Melven Pakkam Perumal, temple art.

அக்காலத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவா ஸ்ரேஷ்டமான, பகவத் பாகவத சிரோமணிகளுடன் நிகழ்த்தும் ஸத்ஸம்ப்ரதாய விசாரங்களின்போது, இத்திருச்சந்நிதியில் ஸ்ரீதாயாரே ப்ராதான்யம் என்றும், ஸ்ரீதாயார் 11 நிலை ராஜகோபுரத் துடன் அஷ்டலக்ஷ்மிகளும் தனித்தனி ஸ்ரீசந்நிதிகளில் திருச் சேவை புரிந்ததாகவும், அவ்வஷ்ட லக்ஷ்மிகளும் ஒருமுகப் பட்டு ஒரே ஸ்ரீமூர்த்தியான ஸ்ரீமங்கல லக்ஷ்மீ என்ற திருநாமத்து டன் மிக அபூர்வ வரப்ரஸாதியாக ஸேவை ஸாதிக்கிறதாகவும் திருவாக்கு அருளியிருக்கிறார்கள். மேலும் அதி விசேஷ ஸ்ரீஸூக்த ஸ்ரீமந்த்ரமே இத்திருச்சந்நிதியில் ஸ்ரீதாயாராக எழுந் தருளி தம்மைச் சரண் புகுந்த பக்தர்களுக்கு, ஸ்ருஷ்டி (குழந்தைப் பேறு), ஸ்திதி (நம் லௌகீக வாழ்க்கைக்கு வேண்டிய அத்தனை ஸம்பத்துக்களும்), லயம் (மோக்ஷப் பேறு - மீண்டும் பிறவாமை) ஆகிய மூன்று வரங்களையும் ஒருங்கே தரக்கூடிய தாயார் இவள்.

அதாவது இந்தத் தாயாரிடம் குழந்தை வரம் வேண்டி வரும் அன்பர்களுக்கு, நல்ல ஸத்தான குழந்தையையும் கொடுப்பாள், வாழ்வதற்கு வேண்டிய எல்லா சௌகர்யங் களையும் கொடுப்பாள் மற்றும் அந்தத் தம்பதிக்கு மீண்டும் ஒரு தொடர் கர்ப்பவாசம் புக வேண்டிய அவஸ்யமும் இல்லாமல் செய்வாள். அப்பேர்ப்பட்ட கருணாஸாகரி இந்தச் சிறப்புமிக்க ஸ்ரீதாயார்.

எப்பேர்ப்பட்ட தாயார், எப்பேர்ப்பட்ட வரங்கள் !!! எப்பேர்ப்பட்ட காருண்யம்,

இவ்வனைத்துக் கீர்த்திகளுக்கும் சிகரம் வைத்தாற் போல், ஒரு பெருங்கீர்த்தி இத்திருத்தலத்தில் பொதிந்திருக்கிறது.

அதர்வண வேதத்தின் ஒரு அங்கமாகிய, உத்தர பாகத் திலுள்ள ஸ்ரீலக்ஷ்மீநாராயண ஹ்ருதய மந்த்ரம், மேல்வெண் பாக்கம் திருச்சந்நிதியிலிருந்து வெளிப்பட்டதாக பாண்டிச் சேரி மஹாத்மா ஸ்ரீமான். R.S.சாரியார் ஸ்வாமிகள் அவர்கள் உணர்ந்து அகமகிழ்ந்து திருவாக்கு அருளியிருக்கிறார்.

மேற்படி மந்த்ரத்தை ப்ரதி வெள்ளி, ப்ரதி மாத உத்ராடம் ஆகிய தினங்களில் தக்க நியமப்படி செய்யப்பட்ட பால்

 

பாயஸத்தில் அபிமந்த்ரித்து விவாஹ ப்ராப்தம், தாம்பத்ய அந்யோன்யம், ஸந்தான ப்ராப்தம் வேண்டி வரும் அன்பர்களுக்கு ப்ரசாதமாக வழங்கப்படுகிறது. அவர்களும் அதிவிரைவில் அனுக்ரஹிக்கப்படுகிறார்கள்.

ஸ்ரீலக்ஷ்மீநாராயண ஹ்ருதய மந்த்ரத்தைச் ஸேவிப்பதால் கிடைக்கும் பலன்களாவன:

Perumal chakra

விரைவில் விவாஹ ப்ராப்தம் அமைகிறது.

Perumal chakra

வரம் வேண்டி வருபவர்களின் குலத்திலேயே குழந்தை இல்லை என்ற குறை இருக்காது.

Perumal chakra

பிறக்கும் குழந்தைகள் அங்கஹீனம், புத்திஹீனம் போன்ற எவ்விதக் குறைகளுமின்றி பூரண அருளுடன் முழுமையாகப் பிறந்து, வளர்ந்து, கீர்த்தி பெறுகின்றனர்

Perumal chakra

கர்ப்பம் தரித்த பெண்கள் முறைப்படி இந்த மந்த்ரத்தைப் பாராயணம் செய்து வந்தால், ஸ்ரீமன் நாராயண ணுக்குச் சமமான தேஜஸ் (ஒளியுடன்) உள்ள குழந்தைகள் பிறக்கும்.

Perumal chakra

மஹா தரித்திரனுக்குக் கூட, மஹாலக்ஷ்மீ கடாக்ஷம் பெருகும். வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.

Perumal chakra

வாக்பலிதம் மிகுந்து பெரும் பெயருடனும் புகழுடனும் சிறந்து விளங்குவார்கள்.

Perumal chakra

ஸ்ரீலக்ஷ்மீநாராயண ஹ்ருதய மந்த்ர புத்தகம் வீட்டில் இருந்தால் அந்த வீட்டிலிருந்து பூத, ப்ரேத, பிசாச, துர் சேஷ்டைகள் அனைத்தும் விலகி லக்ஷ்மீகரமாக வீடுகள் துலங்கி நிற்கும்.

Melvenpakkam Perumal

இந்த அரியப் பொக்கிஷத்தை பாண்டிச்சேரி ஸ்ரேஷ்ட மஹான் ஸ்ரீமான். R.S. சாரியார் ஸ்வாமிகளும், அவர்தம் ஸ்ரீதேவியார் ஸ்ரீமதி.விஷ்ணுப்ரியா சாரி அவர்களும் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுஷ்டித்து, இவ்வையகம் சிறப்புறவும், நம்மையும் ஆசீர்வதித்து பரம கருணையுடன் தந்து அருளியிருக்கிறார்கள்.

பலப்பல மக்களின் மிக மிக அரிய பெரிய உடல் மற்றும் மனநோய்களையும் முழுமையாக குணமளித்து வருகிற பரம க்ருபாலுவாகிய இத்திருத்தல திவ்ய தம்பதிகளுக்கு ஸ்ரீஆரோக்யலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீவைத்யநாதப் பெருமாள் என்கிற காரணத் திருநாமமும் உண்டு.

கால் சூம்பிப் போய் நடக்க முடியாதவர் நாளடைவில் நன்கு நடப்பதும், முற்றிலும் உடல் மற்றும் மன ஊனமான பெண்

நாளடைவில் உடல்நிலை நன்கு சரியாகி உடலும் பேச்சும் நன்கு வந்து ஒரு குழந்தைக்கும் தாயாகி அதற்கு மஹாரண்யம்

ஸ்ரீஸ்ரீஸ்ரீ.முரளீதர ஸ்வாமிகள் நாமகரணம் சூட்டியதும், அந்நிய தேசத்தில் தம் பேத்தி பேச்சே வராமல் கஷ்டப்படுவதைக்

கண்டு பொறுக்காமல் இந்தத் தாயார் பெருமாளிடம் முறையிட்டு ஆறே மாதங்களில் அந்தப் பெண் குழந்தை

நன்கு பேசத் தொடங்கியதும், மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபலமான பெண்மணி அறுவைச்

சிகிச்சைக்கே அவஸ்யமின்றி நன்கு குணமடைந்ததும், தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, மாற்றுக் கல்யாணம்

செய்யத் துணிந்த பெண்ணின் மனோ வியாதியைப் போக்கி பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையையே சந்தோஷமாகக் கைப்

பிடிக்க வைத்த கருணையாகட்டும், எத்தனையோ வலிமை யான மருத்துவக் காரணங்கள் தம்பதிகளின் குழந்தைப்

பேற்றைத் தள்ளி வைப்பதற்கு முனைந்தாலும், அத்தனை யையும் கழித்துக்கட்டி, ஒரு அற்புதமான குழந்தை

பாக்கியத்தைத் தந்தருளும் கருணையையும், அன்பையும் விவரிக்க வார்த்தைகள் போதாது.

இந்தக் கருணையை விவரிக்க ஸ்ரீமத் பகவத் கீதையின் த்யான ஸ்லோகம் தான் நினைவுக்கு வருகிறது:

"மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |
யத்க்ருபா தமஹம் வந்தே பரமானந்த மாதவம் ||"

"யாருடைய கருணையானது முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ, யாருடைய கருணையானது குருடனைப் பார்க்கச் செய்கிறதோ, அந்தப் பரமானந்தப் பேரொளியான மாதவனை நான் வணங்குகிறேன்."

மேல்வெண்பாக்கம் க்ஷேத்திரத்தில் தாயார் ப்ரதான மாகையால், தாயாரின் வாசஸ்தலமாக விளங்கும் திருமேனி கொண்ட பசுக்கள் நிறைந்த கோசாலை இத்திருச்சந்நிதியின் விசேஷங்களில் ஒன்று. தற்சமயம் கோசாலையில் 20 பசுக்கள் உள்ளன.

IMG-20250909-WA0229.jpg

வேறு எங்கும் ஒரு கோடி முறை ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைச் ஸேவித்த பலன், மேல்வெண்பாக்கம் கோசாலையில் ஒருமுறை சேவிக்கப்படும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலேயே கிடைக்கும் என்பது ஐதீகம்.

காசியில் காணப்படும் கோயில்களைப் போல இந்தச் சந்நிதியில் மிகச் சிறிய இடத்தில் 10 சந்நிதிகள் எழுந்தருளியுள்ளன.

ஸ்ரீஸீதா, ஸ்ரீலஷ்மணர், ஸ்ரீஹநுமன் ஸ்ரீகோதண்டராமர் சந்நிதி, உடனாய

ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீயோக நருஸிம்ஹர் சந்நிதி,

ஸ்ரீருக்மாயி பாண்டுரங்கர் சந்நிதி,

ஸ்ரீதன்வந்த்ரி பகவான் சந்நிதி,

ஸ்ரீமத் உடையவர் சந்நிதி

IMG-20250909-WA0276.jpg

ஸ்ரீமத் தேசிகர் சந்நிதி,

ஸ்ரீயோக ஆஞ்சநேயர் சந்நிதி

ஸ்ரீகருடாழ்வார் சந்நிதி,

பன்னிரு ஆழ்வார் சந்நிதி,

ஸ்ரீசுந்தர வினாயகர் சந்நிதி.

இந்தப் புனித இடங்கள் அனைத்தும் மேல்வெண்பாக்கம் கோயிலின் ஆன்மீகச் செழுமையையும் தனித்துவத்தையும் பிரதிபலிக்கின்றன.

ஸம்ப்ரோக்ஷணத்திற்கு எழுந்தருளி ஸேவை ஸாதித்த மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ.முரளீதர ஸ்வாமிகள், எல்லா சந்நிதிப் பெருமாளையும் ஸேவித்த பின்னர், அருளிச் செய்த வாக்கியம்:

“இங்க வந்த பிறகு வேற எந்தச் சந்நிதிக்கும் போக வேண்டாம் போலிருக்கே... அத்தனை பெருமாளும் இங்கேயே ரொம்ப ஆச்சர்யமா எழுந்தருளியிருக்காளே...."

Melvenpakkam Perumal slogan 107

பொருள்

Perumal chakra

என்னுடைய வீட்டில் தங்கம் மழையாகப் பொழிய வேண்டும்

Perumal chakra

என்னுடைய வீட்டில் உயர் வகை தானியங்கள் மூன்று போகமும் விளைய வேண்டும்.

Perumal chakra

அதை உண்டு மூன்று வேளை நான் பசியாற வேண்டும்.

Perumal chakra

அதை வைத்து வியாபாரம் செய்து, பெரும் செல்வம் ஈட்ட வேண்டும்.

Perumal chakra

தக்க வயதில் திருமணம், தக்க வயதில் குழந்தைப் பேறு, தக்க வயதில் பேரன் பேத்திகள், அனுபவிக்கக் கூடிய வயதில் கோடி கோடி யாகச் செல்வம், உலகம் எதையெல்லாம் பெரிய செல்வம் என்று கொண்டாடுகிறதோ, அத்தனையையும் காலம் தாழ்த்தாமல், மேல்வெண்பாக்கம் தாயார் பெருமாள் எனக்குத் தந்தருள வேண்டும்.

ஃபல ச்ருதி : மேற்படி ஸ்லோகத்தை காலை மாலை ஸந்த்யா காலங்களில், தினமும் 28 முறை, ஏகமனதுடன் ஜபித்து வந்தால், உலகத்தில் கிடைக்காத செல்வம் என்று எதுவுமே இல்லை என்பது ஐதீகம்.

சுபமஸ்து - எல்லா ஐஸ்வர்யங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.

bottom of page