
ஸ்தல புராணம்
ஏதிலன், கண்துஞ்சும் வெண்ணரவம்
ஏறிக் கழுத்தாடு வனமாலைக்
காதலன், கார்வண்ணன், தொடைமீது
கஞ்சக் கரம்வைத்து முகமாரும்
பூதலம் புகழ்பெம்மார் பொறுத்திருந்து
பொங்கும் கருணைமுகம் பார்க்கும்பொன்
ஆதரம் மீப்பெருக்கி இணைசேர்க்கும்
மேல்வெண்பாக்கத்து மெல்லியனே.
கால நம்முடைய பரந்த, பழம்பெரும் பாரத பூமியை கிழக்கும். மேற்குமாகவும் வடக்கும் தெற்குமாகவும் ஆயிரமாயிரம் திருக்கோயில்கள் அலங்கரிக்கின்றன. அவற்றுள் ஓட்டத்தில் கவனிப்பாரின்றி, அன்னியர்களின் ஆக்கிரமிப ்பினாலும் நம்மவர்களின் அலட்சியத்தினாலும் முற்றுமாகக் கைவிடப்பட்ட திருச்சந்நிதிகளில், மிகவும் பவித்ரமானதும், பழமையானதும் மேல்வெண்பாக்கம் திருச்சந்நிதியாகும்.
"ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு கருத்தாக்கம் உண்டு. பாரத தேசத்திற்கு ஸனாதன தர்மம் என்னும் மதமே அந்தக் கருத்தாக்கம்" என்கிறார் ஸ்வாமி விவேகானந்தர். "Every country has a theme of it's own and for India, it is religion" - Swaami Vivekhanandha.
ஸ்வாமி விவேகானந்தர் கூறிய பொருளின் அடிப்படையில் பார்த்தால், மிகப்பெரிய அருளும், கீர்த்தியும் கூடிய பல்லாயிரக் கணக்கான திருக்கோயில்களைச் சிதிலமடையாமல் காப்பாற்ற நாம் தவறிவிட்டோம் என்பதே உண்மை.
மேல்வெண்பாக்கம் திருச்சந்நிதி நான்கு யுகங்கள் பழமை யானது. சாளக்ராமத் திருமேனியாக, ஸ்வயம்புவாக, தாயாரும் பெருமாளும் சதுர் யுகங்களாய், ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரமான மேல்வெண்பாக்கத்தில் ஆட்சி செய்யும் மஹிமையை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.